கொரோனா வைரஸ் நிலவரம் ஆபத்தானதாக மாறியுள்ளது- முக்கிய அதிகாரி

0
193

கொரோனா வைரஸ் நிலவரம் மிகவும் இக்;கட்டானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதேவேளை நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என பொதுசுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிலைமை தற்போது மிகவும் அபாயகரமானதாக காணப்படுகின்றது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நிலைமை இன்னமும கைநழுவிப்போய்விடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் முழுமையான ஆதரவை வழங்கினால் அதிகாரிகளால் நிலைமையை கட்டு;ப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து சுகாதார விதிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தேவையற்ற நடமாட்டத்தை மக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.