31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய திட்டம்

கொழும்பு மாநகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் பதிக்கப்படும் கற்களுக்கு பதிலாக, சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை பதிப்பதன் மூலம் நகரின் வெப்பநிலையை குறைக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் மரங்களின் தண்டுகளுக்கு அருகில் கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என தாவர நிபுணர் சுனில் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளில் உள்ள கற்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் இந்திக தெரிவித்தார். ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தையின் இரு பாதைகளுக்கு நடுவில் உள்ள கற்களை மாற்றி சிறிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது நகரின் வெப்பநிலையை சிறிது குறைக்கும் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொழும்பு நகரில் உள்ள செடிகளின் தண்டுக்கு அருகாமையில் பதிக்கப்பட்டுள்ள கற்களை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles