கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த பாதையூடான பஸ்கள் சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.