![Children Vaccinate Against Covid-19 And Common Diseases - Colomb](https://eelanadu.lk/wp-content/uploads/2021/09/Childrens-696x391.jpg)
நாட்டில் கொவிட் -19 தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கலின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைத்த அனைத்து தரப்பினரையும் பாராட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கொழும்பு சுகாதார அமைச்சு வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வு அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டாடப்படும் அதேவேளை, அனைத்து சுகாதார பரிசோதகர் காரியாலயங்களிலும் கொண்டாடப்பட்டது.
அதன்படி நாட்டில் இதுவரை 3 கோடியே 56 இலட்சத்து 34 ஆயிரத்து 497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவற்றுள் 2 கோடியே 30 இலட்சத்து 29 ஆயிரத்து 353 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், 77 இலட்சத்து 98 ஆயிரத்து 598 பேருக்கு பைஸர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
28 இலட்சத்து 99 ஆயிரத்து 460 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியும்,
மொடர்னா – 15 இலட்சத்து 92 ஆயிரத்து 162 பேருக்கும், ஸ்புட்னிக் வி – 3 இலட்சத்து 14 ஆயிரத்து 924 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.