24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு!

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,  இலங்கைத் திருநாட்டில்  வாழுகின்ற மக்கள் அனைவரும்,  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை  வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி  மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும் இவ்விசேட பிரார்த்தனை  வழிபாடுகளைத் தினமும் காலை 6.30 மணிக்கு  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் இடம்பெறும் ‘ஆலய தரிசனம்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles