28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமை பரிசில்!

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.

அதிபர் புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ரணிலின் பணிப்புரைக்கு அமைவாக பொருளாதார சிரமங்களோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதானங்களில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்காக அதிபர் புலமைப் பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனடிப்படையில்இ க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு கொழும்பு மாவட்டத்திற்கு 242 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் புலமைப்பரிசில் பெறும் அனைவருக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையுடன் உரிய புலமைப்பரிசில் எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அதிபர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தரம் 01 முதல் தரம் 11 வரையான 100இ000 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் படிஇ கொழும்பு மாவட்டத்தில் சுமார் 5000 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே வலயக் கல்வி அலுவலகங்களால் அதிபர் நிதியத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் வழங்கத் தகுதிபெற்றவர்களின் பட்டியலின்படி கொழும்பு மாவட்டத்தில் உள்ள 396 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 1758 மாணவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் புலமைப்பரிசில்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புலமை பரிசில்கள் குறித்த தகவல்களானது விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அறிவிக்கப்படும்.

அத்தோடுஇ இது தொடர்பான மேலதிக தகவல்கள் அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.

இதனுடன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள புலமைப்பரிசில் தொகை இன்னும் ஒரு சில தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு அந்தந்த புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.

மேலும்இ இதற்கு இணையாக ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles