சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 1,321 சந்தேக நபர்கள் கைது!

0
119

இதுவரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155,502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 44,777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொத்தம் 1,387 சோதனைகளில், 1,321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.