சபுகஸ்கந்த மீண்டும் மூடப்படும் அபாயம்!

0
114

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் மீண்டும் ஒருமுறை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.