சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை – 120 பேர் கைது

0
3

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.