சமூகத்துக்குள் கொரோன பரவும் ஆபத்து- அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!

0
237

சமூகத்திற்குள்ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

பல நோயாளிகளுக்கு எங்கிருந்து நோய் பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் பல சந்தர்ப்பங்களில் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரன்டிக்ஸில் நோய் பரவியதற்கான பிரதான நபரை கண்டுபிடிப்பதற்கு முதல் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் போக்குவரத்தை முற்றாக கட்டுப்படுத்தவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.