30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்!

உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அலருடைய 78ஆவது வயதில் நேற்று (25/10/2020) காலமானார்.

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தநிலையில் காலமானார் என்று சம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண தொலைக்காட்சி நிறுவனமான இருந்த சம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுகடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் லீ குன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கியபின் அவரின் சசோதரரும், லீ குன் மகனுமான லீ ஜே யங்கும் சேர்ந்து கவனித்து வந்தனர். தென் கொரியாவில் ஒரு குடும்பத்தால் நடத்தப்பும் மிகப்பெரிய தொழிற்சாலை எனும் பெருமையை சம்சங் நிறுவனம் பெற்றிருந்தது.ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான வளர்ந்த சம்சங் நிறுவனம் மின்னணு துறை தவிர்த்து கப்பல் கட்டுதல், காப்பீடு, கட்டுமானம், ஹோட்டல் நடத்துதல், தீம் பார்க்க உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஜப்பான் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட கொரிய தீபகற்பத்தில் உள்ள டியாகு எனும் நகரில் லீ குன் பிறந்தார். லீ குன் தந்தை லீ யங் சல் கடந்த 1938-ம் ஆண்டுவரை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். அதன்பின் 1950-53-ம் ஆண்டு கொரியப் போருக்குப்பின் பல இழப்புகளைச் சந்தித்த லீ யங் சல், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தைத் தொடங்கினார்.வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம் என்று சாம்சங் நிறுவனத்தை அறிமுகம் செய்து லீ யங் சல் நடத்தி வந்தார். தனது தந்தை மறைவுப்பின் லீ குன் அந்த நிறுவனத்தை கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தில் பல்வேறு புத்தாக்கங்கள், புதிய பொருட்கள் கண்டுபிடிப்புகளைச் செய்து அனைவரையும் லீ குன் திரும்பிப்பார்க்க வைத்தார்.வெற்றிகரமாக சாம்சங் நிறுவனத்தை நடத்திய லீ குன் கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு நோயில்விழுந்தார். அதன்பின் நிறுவனத்தைக் கவனிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்ட நிலையில் தீவிர உடல்நல பாதிப்பால் இன்று காலமானார்.

நன்றி: தேசம்நெற்

Related Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுகின்றது

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள்...

அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முன்னணியின் யாழ்ப்பாண...