தேசிய தௌஹீத் ஜமா அத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் ஏனைய அறுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
தடுப்புக்காவல் உத்தரவு ஒன்றின் கீழ் இந்த ஏழு பேரையும் நவம்பர் 4ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை சஹ்ரானின் மனைவி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலையில் ஆஜராகியிருந்தார். நாளையும் ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.