இவ்வருடத்திற்கான சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அசாதாரண சூழ் நிலை காரணமாகவே இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மிக இக்கட்டான இந்த கொரோனா காலகட்டத்தில் உயர் தர பரீட்சைக்காக மாணவர்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் G L பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.