சாரதியால் தாக்கப்பட்ட நடத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
150

கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசத்தில், சாரதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.