திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயது சிறுமியொருவாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
உடப்புக்கேணி, ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிறுமியை திருமணம் முடிப்பதாக கூறி வெளியிடங்களுக்கும் மற்றும் சிறுமியின் வீட்டுக்கும் சென்றும் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திரிவதை கண்ட சிறுமியின் பெற்றோர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிதத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.