சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கும் AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டம்!

0
14

சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கக்கூடிய AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

பிரித்தானிய அரசாங்கம் , செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதைத் தடை செய்யும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. 

இந்த வகையில் இச்சட்டத்தை அமுல்படுத்தும் முதல் நாடாக பிரித்தானியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

 Internet Watch Foundation அறிக்கையின் படி, 2024-ஆம் ஆண்டில் AI மூலம் உருவாக்கப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகப் படங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“Nudeify” தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களின் உண்மையான புகைப்படங்களை மாற்றி வடிவமைக்கும் செயல்முறைகள் அதிகரித்துள்ளன. 

இது மனிதவியலுக்கும், சமூக நலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரித்தானியாவின் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களான AI மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவது, பகிர்வது, வைத்திருப்பது அனைத்தும் குற்றமாகும் என பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

எனவே சிறுவர்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்தும் முயற்சியாக இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.