31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டு கருத்தரங்கு

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டு கருத்தரங்கின் நோக்கம் அரசியல் மட்டத்தில் நிறுவன கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான கூட்டு கருத்தரங்கு ஒன்றை சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தியிருக்கிறது.

இணையவழியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இலங்கையில் உள்ள சீனத்தூதரகத்துடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரசியலில் ஒவ்வொரு கட்டமைப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்தல் ஆகியவையே இந்த கூட்டு கருத்தரங்கின் முக்கிய நோக்கம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

அதேவேளை இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சீனத்தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கருத்தரங்கில் பங்குகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் நிறுவனக்கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். எதிர்காலத்தில் இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இக்கூட்டு கருத்தரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த யாப்பா அபேவர்தன, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles