சீன ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் உரையாட வைப்பதற்கு முயற்சி

0
127

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடலை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கடன்மறுசீரமைப்பு மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இரு நாடுகளின் தலைவர்களையும் தொலைபேசி மூலம் உரையாட செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடுகளாக சீனாவும் இந்தியாவும் காணப்படுகின்றன.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு இந்த இரு நாடுகளினதும் கடன் உத்தரவாதம் மிகவும் அவசியமாகும்.