பாராளுமன்ற தேர்தல் முடிவை வைத்து தமிழ் மக்களின் தீர்வவு தொடர்பில் முடிவினை எடுக்க முடியாது சீன தூவரின் கருத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்.இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில் சீன தூதுவருக்கு சிறிய தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள்.அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழர்கள் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள் .
அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது.ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது.ஆகவே இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினையான காணாமலாக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.
தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்குஇ கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்