சுற்றுலா சென்றதாக பிக்குவுக்கு எதிராக போராட்டம் !

0
76
லெவ்வந்துவ பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் பிரதானி  பெண்களுடன் சாதாரண ஆடைகளை அணிந்து உல்லாசப் பயணத்திற்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த துறவி சுற்றுலா சென்றிருந்த போது பிரதேசவாசி ஒருவர் இதனை பார்த்து தனது முகநூல் பக்கத்தில் படங்களை இணைத்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விஹாராதிபதி வேண்டாம் அவரை கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.