31 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி!

2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆப்கானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு இவ்வாறு தகுதி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் ​மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் Gulbadin Naib 4 விக்கெட்டுக்களையும், Rashid Khan 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதேவேளை, சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி தெரிவாவதற்கு 37.1 ஓவர்களில் 292 என்ற வெற்றி இலக்கை கடக்க நிர்ணயிக்கப்பட்டிருந்து.
அதன்படி, 38 ஆவது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசிய போது இரண்டு விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது.
தனஞ்சய டி சில்வா வீசிய முதல் பந்தில் Mujeeb Ur Rahman ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தெரிவானது.
அதனை தொடர்ந்து அதே ஓவரில் 4 ஆவது பந்தில் Fazalhaq Farooqi ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி 2 ஓட்டங்களால் போட்டியிலும் வெற்றிப் பெற்றது.
அதன்படி, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நபி 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவாகியுள்ளன.

Related Articles

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...