சூர்யாவின் திரை வாழ்க்கையை மாற்றிய ரெட்ரோ!

0
104

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரெட்ரோ படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் இரண்டு நாட்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்கிள் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக நிரம்பியுள்ளது.

புக் மை ஷோ செயலியில் கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்படமே சூர்யாவிற்கு இந்தளவுக்கு ஒரு ஓபெனிங் கொடுத்த திரைப்படமாகும்.