“சேதத்திற்கு முன்னாள் அரசியல்வாதிகளே காரணம்!”

0
9

பல ஆண்டுகளாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB)  திட்டமிட்ட சேதத்திற்கு உள்ளாகியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனை குறப்பிட்டார்.

மேலும், “இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இந்த விடயத்தில் பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் உள்ளனர்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், SLTB க்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் சேவையில் இல்லை என்றும், பல்வேறு முறைகேடுகளைச் செய்ததற்காக சுமார் 1,000 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்….