25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவு வழங்குவாரா?

நாங்கள் பேசப்போகின்றோம் செய்யப்போகின்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் பேசி செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். ஜனாதிபதி ரணிலின் செயல்பாடுகள் நம்பிக்கைக்குரியதாக இருந்தால் எங்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசுவது என்றால் முக்கியமாக புதிய அரசமைப்பு தொடர்பில் தான் அந்தப் பேச்சு அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை விளக்கி நாம் எழுத்து வடிவிலான கோரிக்கைகளை ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அந்தக் கோரிக்கைகள் மிகவும் விவரமானவை. ஆனால், அதன் அடிப்படையில் ஒன்றும் நடைபெறவில்லை. ஆட்சிகள் மட்டும் மாறியிருக்கின்றன. ஒவ்வோர் ஆட்சியிலும் தாங்கள் அதைச் செய்வோம் – இதைச் செய்வோம் என்று அரச தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு வித்தியாசமாக – நம்பிக்கைக்குரியதாக- முன்னேற்றம் காணக்கூடிய வகையில் கையாளப்படுமாக இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழங்குவோம் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related Articles

மருமகனை அடித்துக் கொன்ற மாமனார் கைது!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட...

மக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி...

ஹெரொயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் களுவாஞ்சிகுடி விசேட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மருமகனை அடித்துக் கொன்ற மாமனார் கைது!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட...

மக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி...

ஹெரொயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் களுவாஞ்சிகுடி விசேட...

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறை மூலம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.இதேவேளை,...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...