ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டதாரிகள் போராட்டம்!

0
34

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளைஇ தொழில் கோரும் பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு தொழில் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.