ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இதன்போது சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.