ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்: முக்கிய பிரபலம் மரணம்!

0
238

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பாடிக்கொண்டிருந்த, இலங்கையின் ரப் பாடகர் சிராஸ் யூனுஸ், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கடந்த 4 நாட்களாக, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், நேற்று இரவு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில், பாடலைப் பாடிக்கொண்டிருந்த பாடகர் சிராஸ் யூனுஸ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவும், குறித்த பாடகர், ஆர்ப்பாட்ட இடத்தில் பாடிக்கொண்டிருந்த காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.