ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல் மற்றும் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,737 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதற்கமைய, நேற்று முன்தினம் 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 4,209 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.