ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
78

ஜப்பானின் வடகிழக்கே அமைந்துள்ள ஃபுகுஷிமா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி நேற்று இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் விபத்தை சந்தித்த அணு மின் நிலையத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,விபத்தால் பாதிக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு குறைக்கப்பட்ட நீரை வெளியேற்றும் பணி இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.