ஜவான் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

0
127

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ நேற்று (செப்டம்பர் 7) ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.