ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்களை கொன்று குவித்த ஜே.வி.பிக்கு இம்முறை கத்தோலிக்க வாக்குகள் கிடைக்கும் என நம்ப முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
களனியில் நேற்று இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.