சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் விளையாடிய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்திய வீரர் முகமது ஷமி மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் பங்களாதேஷின் சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாடியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.