பங்களாதேஷில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமான நிலையம் ஆறு மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.
டாக்காவில் ஏற்பட்ட அமைதியின்மையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டிற்கு வரும் சில விமானங்கள் இந்தியாவுக்கு.திருப்பி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், நேற்று முதல் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டின் பெரிய ஆடைத் தொழில்சாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.