டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திலும், பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக
நடைபெற்றன. உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் நிகழ்வுகள், பணியிடங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் நிறுவனங்களிலும் சிறப்பாக நடைபெற்றன.

டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில், ஆஸ்க் கேபிள் விசன் பணியாளர்கள், டான் தொலைக்காட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். பூரண கும்பம் வைக்கப்பட்டு,சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி படைக்கப்பட்டது.
