டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி ‘டெங்கு ஒழிப்பு வாரம்’ இன்று திங்கட்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு செய்யப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 19,000 அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இந்த காலப்பகுதியில் 7 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.