இந்திய பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் வலைப்பந்து வீச்சாளராக இலங்கையின் 18 வயது கருக்க சங்கேத் இணைந்துள்ளார்.
கருக்க அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஆடியதோடு அவரது பந்துவீச்சு பாணி அதிகம் அவதானத்தை பெற்றிருந்தது. லைசியம் சர்வதேச பாடசாலை மூலம் கிரிக்கெட்டுக்கு பிரவேசித்த அவர் அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்டு அணியில் இடம்பிடித்து வந்தார்.
சங்கேத் இதுவரை இலங்கை இளையோர் அணிக்காக 16 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு 22.68 பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார். அவரது சிறந்த பந்துவிச்சு 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளாகும்.