டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முன்னேற்றம்

0
34


இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அபார வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ. சி. சி) வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்கா (63. 33 சதவீதம்) முதலிடத்தில் நீடிக்கிறது. அவுஸ்திரேலியா (60.71 சதவீதம்) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா (57. 29 சதவீதம்) மூன்றாம் இடத்தில் தொடர்கிறது,

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இலங்கை (45.45 சதவீதம்) 5ஆம் இடத்திலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 6ஆம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான் (33.33 சதவீதம்), பங்களாதேஷ் (31.25 சதவீதம்), மேற்கு இந்திய தீவுகள் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன என்று ஐ. சி. சி. அறிவித்துள்ளது.