24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டொனால்ட் ட்ரம்புடன் மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் சந்திப்பு

அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிரம்ப் தற்போது,, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழிலதிபர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.ஏற்கனவே, ட்ரம்ப் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles