ட்ரம்ப் – மஸ்க் நட்பில் விரிசல்?

0
7

ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளமை இருவரினதும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது.இருவரும் ஒருவரையொருவர் அண்மைக்காலமாக விமர்சித்து வருகின்றமையை சர்வதேச செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் தமது ஆதரவு இன்றி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருக்க முடியாது என தொழிலதிபர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதேவேளை, மஸ்க் உடன் தமக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது எனவும் ஆனால், இனியும் அந்த நட்பு தொடருமா என தெரியாது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மஸ்க் மீது தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாகத் தொழிலதிபர் ஈலோன் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் இவர்களுக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வந்தனர்.
தற்போது இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.