சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 400 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
அதேபோல், தனஞ்சய டி சில்வா தனது 7 ஆவது டெஸ்ட் சதத்தினை சற்றுமுன்னர் பதிவு செய்தார்.
அதன்படி, திமுத் கருணாரத்ன 161 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வா 117 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட திர்மானித்தது.
அதன்படி, போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 173 ஒவர்களுக்கு 541 ஓட்டங்களை பெற்றிருந்த போது பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சான்டோ 163 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
அணித்தலைவர் மோமினுல் ஹக் 127 ஒட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
முஸ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
போட்டி கண்டி பல்லேகெல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.