தனது நீண்ட கால ஆயுளுக்கான இரகசியத்தை தெரிவித்த 106 வயது மூதாட்டி!

0
10

இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற மூதாட்டி தனது நீண்ட கால ஆயுளுக்கான இரகசியத்தை தெரிவித்துள்ளார். 1919 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

தற்போது அந்த மூதாட்டியின் வயது 106 ஆகும். இவர் இனிப்புகளை விரும்பி உண்ணுவாராம்.அதிக சாக்லேட் உண்பதும் ,விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் தனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியிருக்கிறார்.