தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 464,254 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 232 கோடிக்கு அதிகமான பணத்தொகை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக மினுவங்கொட, திவுலுபிட்டிய மற்றும் வேயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா இதுவரையில் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.