கடந்த ஏழு வருடங்களில் அரசியல் மயமாக்கல் மற்றும் ஊழலின் விளைவாக அரச நிறுவனங்கள் சுமையாக மாறியுள்ள யதார்த்தத்தின் அடிப்படையில் தனியார் மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“அரச நிறுவனங்கள் ஒரு சுமையாக மாறுவது ஒரு உண்மையாகும், இதன் அடிப்படையில் நாங்கள் தனியார் மயமாக்கலுக்கு நிபந்தனை ஆதரவை வழங்குகிறோம்,” என்றார்.
ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை இருந்தது போன்று தனியார்மயம் மோசடியாக இருக்கக்கூடாது.
தனியார்மயமாக்கல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். சுரண்டலைத் தவிர்க்கும் வகையில் ஒழுங்குமுறை பொறிமுறை இருக்க வேண்டும்.
இது தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரநிலைக்கு அவசியமான நிறுவனங்களை பாதிக்கக்கூடாது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அரச துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.