மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி மூவரை உயிரிழக்கச் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்தே 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மிரிஹான பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி மூவரை உயிரிழக்கச் செய்தார் என இவர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.