தமிழ் சினிமா ‘திலீபன்’: திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை
‘இயக்குநர்’ ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி.
அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் ‘திலீபன்’.
இயக்கத்திற்காக தன் உயிரையே கொடுத்த திலீபனின் தியாகம், உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே பெரும் தாக்கத்தையும் அவர் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் அதை நாற்பது நிமிட படமாக எடுக்கவே திட்டமிட்டிருந்தார். அதற்கான திரைக்கதையைக் கேட்ட இயக்குநர் பாலா, அதைத் தானே தயாரிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.