30 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் மக்களுக்காக என்ன செய்வீர்கள்?

தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவிற்கே கிடைக்கு மென்று, ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தமிழ் விவகாரங்களை கையாளும் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார். 2005இல், தமிழ் மக்கள் விட்ட வரலாற்று தவறை, இம்முறை செய்யமாட்டார் கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். சில தினங்களுக்கு முன் னர், தமிழ் மக்கள் தன்னைத்தான் ஆதரிப்பார்கள் என்று, சஜித் பிரேம தாஸ தெரிவித்திருந்தார். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் வாக்க ளித்ததை முன்வைத்தே, ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் மனோ நிலையை மதிப்பிடுகின்றனர். ஜனாதிபதித் தேர்தல்களின் போது, தமிழ் மக்கள் பொதுவாகவே ஜக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம்தான். இதற்கு தமிழ் மக்களை வழிநடத்திய தமிழ் தேசிய கட்சிகளே காரணமாகும்.
இலங்கை தமிழரசு கட்சியும் சரி, பின்னர் உருவாகிய தமிழர் விடுத லைக் கூட்டணியும் சரி – ஜக்கிய தேசியக் கட்சியியுடன், இணக்கப் பாட்டிற்கு சென்றிருப்பதே வரலாறு.
அதேபோன்று, தமிழ் தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு முயற்சிகள் அனைத்துமே ஜக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பண்டா – செல்வா உடன்பாட்டுக்கான முயற்சி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தேசிய இனப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் இடம்பெற்ற இரண்டு வரலாற்று, பேச்சுவார்த்தைகளான, இந்திய – இலங்கை ஒப்பந்தம் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆகிய இரண்டும், ஜக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே இடம்பெற்றன.
இந்தப் பின்புலத்தில் நோக்கி னால், தமிழ் தலைமைகள் காலத்திற்கு காலம் ஜக்கிய தேசியக் கட்சி யின் மீது, நம்பிக்கை வைத்து, தீர்வுகளை காண முற்பட்ட வரலா றுண்டு. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், ஜனாதிபதி தேர்தல்களி;ன் போது, தமிழ் மக்கள் ஜக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்திருக் கின்றனர். இந்த விடயங்களை துல்லியமாக மதிப்பிட்டதன் விளை வாகவே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை 2005 ஜனா திபதி தேர்தலின் போது, தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் வியூகத்தில் வெற்றிபெற்றது.
தமிழ் மக்கள் வாக்களிப்பில் பங்குகொண்டிருந்தால் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரித்திருப்பர். தற்போதுள்ள சூழலில், ரணில் மற்றும் சஜித் ஆகிய இருவருமே, தமிழ் மக்களின் வாக்குகள் மீது, அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக் கின்றனர். ஆனால், இருவருமே, தமிழ் மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக தாங்கள் என்ன செய்வார்கள் என்று இதுவரையில் கூற வில்லை.
இந்த இடம்தான் தமிழ் மக்கள் உற்றுநோக்க வேண்டிய இடம் – இந்த இடத்தைத்தான் தமிழ் கட்சிகள் உற்று நோக்கவேண்டும். ஈழநாடு தொடர்ந்தும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டிவருகின்றது. சாதாரணமாக தமிழ் மக்களின் வாக்குகளை பெறலாம் என்னும் தென்னிலங்கை மனோபாவத்திற்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். உதாரணமாக முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் கூட, ஜனாதிபதி வேட்பாளரை, ஆதரிக்கும் போது வெறும் வார்த்தைகளை நம்பி ஆதரிப்பதில்லை. மாறாக, அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளுக்கான உடன்பாட்டின் அடிப்படையில்தான் ஆதரிக்கின்றனர்.
அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு அது சரியானது – ஆனால், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்னை முற்றிலும் வேறுபட்டது. அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு தொடர்பில் வெளிப்படையான அறிவிப்புக்கள் இன்றி, தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிக்க முடியாது – தமிழ் மக்களின் வாக்குகளை

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles