தலங்கம பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் தீ – வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

0
111

தலங்கம பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வெளி நாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயை அணைக்க கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.