தாமதமான மின் கட்டண திருத்தம்!

0
75

மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு 2024 டிசம்பர் 06 ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உத்தேச மின்சார கட்டண திருத்தத்திற்கான அனுமதியை 2025 ஜனவரி 17 ஆம் திகதிக்குள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.