தாய்லாந்தில் பாடசாலைப் பேருந்தொன்று தீக்கிரையானதில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களைச் சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பேருந்தே, டயர் வெடித்து, விபத்துக்குள்ளான நிலையில், தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துத் தொடர்பில் தாய்லாந்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.