தாய்லாந்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த அனர்த்தத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உதை தனி மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தில் திடீரென தீ பரவியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.